அக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…

By / 1 month ago / India, law, NEWS, parivu / No Comments
அக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…
The short URL of the present article is: http://parivu.tv/zGu5p
Share

‘மி டூ ‘ விவகாரத்தில் சிக்கியுள்ள வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜெ.அக்பர் சார்பில் நீதிமன்றத்தில் வாதாட 97 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் புகார்

எம்.ஜெ..அக்பர் முன்னாள் பத்திரிகையாளர். பல ஆண்டுகளுக்கு முன் அவர் தங்களிடம் தவறாக நடக்க முயன்றார் என ஏழு பெண் பத்திரிகையாளர்கள் சில நாட்களுக்கு முன் புகார் கூறி இருந்தனர். புகார் நேரத்தில் அக்பர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தார்.

நாடு திரும்பிய உடன் அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா செய்யவில்லை.

தன் மீது புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்காலத்தில், 97 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது, அக்பர் சார்பில், நீதிமன்றத்தில் கரன்ஜாவலா அண்டு கோ என்ற சட்ட நிறுவனம் வாதிட உள்ளது. அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ எங்கள் நிறுவனத்தில், 100 வழக்கறிஞர்கள் உள்ளனர்.

வழக்கமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வக்காலத்தில், அனைத்து வழக்கறிஞர்கள் பெயர்களையும் நாங்கள் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், எங்கள் கிரிமினல் வழக்கு குழுவில் ஆறு வழக்கறிஞர்கள் தான் உள்ளனர். அவர்கள் தான் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள்’ என்றார்.

—————————————————————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *