அணை பாதுகாப்பை ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி உறுதி செய்யும் கர்நாடக அரசு

By / 4 months ago / India, NEWS, parivu / No Comments
அணை பாதுகாப்பை ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி உறுதி செய்யும் கர்நாடக அரசு
The short URL of the present article is: http://parivu.tv/VkRbB
Share

கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகள் ட்ரோன் கேமராக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஓய்ந்ததை அடுத்து, கர்நாடகா முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி அணைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் அணைகள் பாதுகாப்பாக உள்ளதாக கூறினார்.

இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ட்ரோன் கேமராக்கள் மூலம் நடைபெற்ற ஆய்வு பணிகளில் அணைகள் பாதுகாப்பாக உள்ளன.

இதுவரை ஆய்வு செய்யப்பட்ட அணைகள் எதிலும் நீர் வெளியேற்றம், விரிசல் மற்றும் கசிவு போன்றவை கண்டறியப்படவில்லை.

——————————————————————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *