அதிமுக ஆர்.கே.நகர் வேட்பாளராக தினகரன் அறிவிப்பு…

The short URL of the present article is: http://parivu.tv/2JVUO
- சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடியது.
- இந்த கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
- ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
- இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தற்போது, அதிமுக மூன்று அணிகளாக செயல்பட்டு வருகிறது.
- சசிகலாவை பொதுச்செயலாளராக கொண்ட ஒரு அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
- தீபா அணி சார்பில், தீபாவே ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஓபிஎஸ் அணி சார்பில் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த மதுசூதனன் அல்லது ராஜேஷ் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
- சசிகலா தரப்பு அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என்பது பற்றி, ஆட்சி மன்ற குழு 15ம் தேதி (இன்று) கூடி முடிவு செய்யும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார்.
- அதன்படி, அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
- இந்த கூட்டத்தில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன், வேணுகோபால், வளர்மதி, தமிழ்மகன் உசேன், ஜஸ்டின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
—————————————————————————————————————————————-
AIADMK candidateannouncementNews
Leave a comment