அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏக்கள் இன்று மாலை கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல்…

By / 1 year ago / NEWS, Tamil Nadu / No Comments
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏக்கள் இன்று மாலை கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல்…
The short URL of the present article is: http://parivu.tv/WELu6
Share
  • அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று சசிகலா தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.
  • கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏ.க்களை மூன்று சொகுசு பஸ்களில் அழைத்து சென்றனர்.
  • கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் பகுதியில் உள்ள தெற்குணப் பட்டில் இருக்கும் தனியார் சொகுசு ஓட்டலில் பாதுகாப்புடன் அவர்களை தங்க வைத்துள்ளனர். 
  • இந்த பரபரப்பான சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து இன்று மதியம் 1.25 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் புறப்பட்டு சென்னை வருகிறார்.
  • இதைத் தொடர்ந்து சசிகலா இன்று மாலை 5 மணிக்கு  கவர்னர் மாளிகைக்கு சென்று அவரை சந்திக்க உள்ளார்.
  • அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததற்கான கடிதத்தை வழங்குவார்.
  • பிறகு அதன் அடிப்படையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோர உள்ளார்.
  • சசிகலாவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு செல்வார்கள் என்று தெரிகிறது.
  • அதை ஏற்றுக் கொண்டு சசிகலாவை உடனே ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுப்பாரா? அல்லது சொத்து குவிப்பு தீர்ப்பு வருவதை காரணம் காட்டி
  • பதவி ஏற்பு விழாவை சில தினங்கள் தள்ளி வைக்கலாம் என்று கூறுவாரா? என்பது சஸ்பென்சாக உள்ளது. 
  • இந்த சூழ்நிலையில் தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பான குற்றச்சாட்டு கூறி உள்ளதால் கவர்னர் அவரை முதலில் அழைத்து பேசக்கூடும் என்று உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
  • ஓ.பன்னீர்செல்வம் கூறும் தகவல்களை பெற்று அதன் அடிப்படையில் செயல்படக் கூடும் என்றொரு தகவலும் பேசப்படுகிறது.
  • இதனால் கவர்னர் வித்யா சாகர் ராவ் எந்த மாதிரியான முடிவை எடுப்பார்  என்பதை நாடு உற்றுநோக்கி உள்ளது.   
  • சட்டசபையில் பெரும் பான்மைக்கு 118 உறுப்பினர் களின் ஆதரவு தேவை. அ.தி.மு.க.வுக்கு இப்போது 130 பேரின் ஆதரவு உள்ளது.
  • பன்னீர்செல்வத்துக்கு 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க. வில் இருந்து மேலும் 13 பேர் வெளியேறினால் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும்.

————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *