அனைத்து அதிமுக சட்டன்ற உறுப்பினர்களும் தமக்கு ஆதரவளிக்கும் சூழல் உருவாகும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்…

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
அனைத்து அதிமுக சட்டன்ற உறுப்பினர்களும் தமக்கு ஆதரவளிக்கும் சூழல் உருவாகும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்…
The short URL of the present article is: http://parivu.tv/gwa7R
Share
 • அனைத்து அதிமுக சட்டன்ற உறுப்பினர்களும் தமக்கு ஆதரவளிக்கும் சூழல் உருவாகும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 • தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதாவின் மனசாட்சிப்படி அனைத்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் செயல்படுவர் என தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.
 • தமக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து பல சட்டமன்ற உறுப்பினர்கள் தம்முடன் பேசி வருவதாக தெரிவித்தார்.
 • ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தாம் நினைக்கவில்லை.
 • ஆனால் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவர்கள் அளித்த பேட்டியில் தமிழக மக்களுக்கு திருப்தி இல்லை.
 • எனவே தான் இது குறித்த சந்தேகத்தை தீர்க்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவித்ததாக கூறினார். 
 • மறைந்த ஜெயலலிதாவின் கொள்கைகளை நிறைவேற்றும் வகையில் தமது பணி இருக்கும் என்றார்.
 • மேலும் பொதுச்செயலாளர் பதவியி்ல் இல்லாமல் மறைந்த MGR முதல்வராக இருந்ததையும் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டினார்.
 • அரசியல் வாரிசாக ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டவில்லை என்றும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
 • மேலும் பேசிய அவர் மும்பை சென்று ஆளுநரை சந்திக்கும் திட்டம் தற்போது இல்லையென்றார்.
 • மேலும் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு தாம் காரணமல்ல என்ற அவர், முதல்வர் பதவி பற்றி பேசி அமைச்சர்கள் சிலர் தான் குழப்பம் விளைவித்ததாக குறிப்பிட்டார்.
 • சசிகலா பதவியேற்பு தாமதமாவது குறித்து ஆளுநர் தான் விளக்கமளிக்க வேண்டும் என்றார். 

——————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *