அனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…

By / 1 month ago / India, NEWS, parivu, Tamil Nadu / No Comments
அனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…
The short URL of the present article is: http://parivu.tv/uRgrw
Share

நாட்டில் உள்ள அனைவரையும் சைவ உணவு முறைக்கு மாற எங்களால் உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நாட்டின் உள்ள அனைவரும் சைவ உணவிற்கு மாற வேண்டும் என விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பினர்.

மேலும், ஒவ்வொருவரும் சைவ உணவிற்கு மாற வேண்டும் என எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க உத்தரவிட அந்நிறுவனம் சார்பில் தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், அது அரசு எடுக்க வேண்டிய முடிவு என்றனர்.

ஏற்கனவே இது தொடர்பாக பிரச்னை எழுப்பப்பட்டும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இது போன்ற அனைத்து விஷயங்களுக்கும் அரசை வலியுறுத்துவது எங்களின் வேலையில்லை என கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

——————————————————————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *