‘அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது’ தமிழகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
‘அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது’ தமிழகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
The short URL of the present article is: http://parivu.tv/8ZmXs
Share
 • நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி நான் அரசியலில் இல்லை. எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை.
 • ஊழலுக்கு எதிரான என் கசப்புணர்வை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.
 • ஆரம்பத்தில் நான், குற்றப் பின்னணி கொண்ட கும்பல் என்று சொன்னபோது, அது அரசியல் சார்பில்லாத ஒருவனின் கோபமாக கருதப்பட்டது.
 • இப்போது வந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு அதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சசிகலா மட்டுமின்றி, ஜெயலலிதாவும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
 • சட்டப்பேரவையை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக, பரிசோதிக்கக் கூடாது.
 • எனவே, மறுதேர்தல் நடத்த வேண்டும். இப்போது மக்கள் தங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை.
 • காரணம், தற்சமயம் கவுன்சிலர்கள் மூலமும், எம்எல்ஏக்கள் மூலமும் பேச வேண்டியிருக்கிறது. மறுதேர்தல் வைத்தால், தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக மக்கள் உணர்த்துவார்கள்.
 • மறுதேர்தல் என்பது மக்களுக்குச் செலவு வைக்கக்கூடிய ஒன்றுதான்.
 • ஆனால்,என்ன செய்வது? தரையில்பாலைக்  கொட்டிவிட்டோம்
 • அதைச் சுத்தம் செய்ய வேண்டும். எனவே, மறுதேர்தல் வைத்து, மீண்டும் பால் கறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
 • எனக்கு அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது. காரணம், நாம் வேறுவிதமான சிந்தனை கொண்ட மக்கள்.
 • இந்தியாவுக்கு இப்போதுள்ள அரசியல் தேவையில்லை. நான் மிகவும் கோபக்காரன்.
 • இந்தியாவுக்கு என்னைப் போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம்.
 • சமநிலை கொண்ட மனிதர்கள்தான் அரசியலுக்கு தேவை. நான் எப்படி கோபமாக இருக்கிறேனோ, அதுபோலவே மக்களும் இருக்கிறார்கள்.
 • நல்ல அரசியல்வாதிகளை தேடிப் பாருங்கள். அத்தகைய மனிதர்களை எல்லா நேரமும் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ காண முடியாது. 
 • சில நேரம் வீதியில் கூட அத்தகைய மனிதர்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.
 • மெரினாவில் நடந்ததைப் போல் இன்னொரு திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை நிகழ்ந்தால், நிச்சயம் மக்கள் கொந்தளிப்பார்கள்.
 • அப்படியொரு நிலை ஏற்படும்வரை நாம் காத்திருக்க வேண்டாம் என்றார்.
 • ஒரு மாநில சட்டசபையை நடத்த முடியாத சூழலில் கவர்னர் அவையை முடக்கி வைக்க நடவடிக்கை எடுக்கலாம்.
 • முடக்குவதால் பயனில்லை என்ற சூழலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356வது விதியின் கீழ் அரசை கலைக்கலாம் என்று கவர்னர் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கலாம்.
 • அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்குவார்.

—————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *