அறை வாசல் வரை சென்றும் நிர்மலா சீதாராமனை சந்திக்க முடியாததால் அவமானப்பட்ட OPS !

By / 5 months ago / India, NEWS, parivu, Politics / No Comments
அறை வாசல் வரை சென்றும் நிர்மலா சீதாராமனை சந்திக்க முடியாததால் அவமானப்பட்ட OPS !
The short URL of the present article is: http://parivu.tv/MQQZ2
Share

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெல்லிக்கு வந்தது அரசியல் பயணமோ அல்லது அரசு சார்ந்த பயணமோ இல்லை.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது மரியாதை நிமித்தமானது என்றார். மதியம் சென்னையில் பேசிய முதல்வர் பழனிசாமி கூட தனது சகோதரர் சிகிச்சைக்காக தனி விமானம் கொடுத்து உதவிய மத்திய அமைச்சருக்கு, நன்றி தெரிவிக்கவே ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் துணை முதல்வா் OPS-ஐ நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என அவரது அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து Nsitharamanoffice என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், எம்.பி மைத்ரேயனை மட்டுமே சந்திக்க நேரம் ஒதுக்கியிருப்பதாகவும், OPS-ஐ நிர்மலா சந்திக்கவில்லை என்றும் ட்விட்டரில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் செய்தியாளர்களிடம் பேசும் போது நிர்மலா சீதாராமனை பார்க்கவே டெல்லி வந்ததாக OPS கூறியது குறிப்பிடத்தக்கது.

காத்திருப்பு:

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்க்க துணை முதலவர் பன்னீர்செல்வம் காத்திருந்ததாகதகவல் வெளியாகியுள்ளது.

OPS மீதான சொத்து குவிப்பு வழக்கு ஐகோர்ட்டில் தீவிர விசாரணையில் உள்ளது. அவரது ஆதரவாளர் செய்யாதுரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

இந்நிலையில் தமது சொந்த பிரச்சனை குறித்து பேசவே OPS டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிர்மலா சீதாராமன் மூலம் பிரச்சனையை தீர்க்க OPS முயன்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தம்மை சந்திக்க நிர்மலா மறுத்துள்ளதால் OPS அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.

அவமானப்பட்ட OPS:

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க OPS, கே.பி.முனுசாமி, மைத்ரேயன் ஆகியோர் காத்திருந்தனர்.

சந்திக்கும் நேரம் வந்த போது மைத்ரேயனை மட்டுமே உள்ளே வரும்படி நிர்மலா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

மைத்ரேயனுடன் உள்ளே செல்ல OPS-ம் எத்தனித்துள்ளார். ஆனால் அனுமதி இல்லை என கூறி நிர்மலாவின் உதவியாளர் பன்னீரை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மைத்ரேயன் மட்டும் அறைக்குள் சென்று மத்திய அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார்.

அமைச்சரின் அறைவாசல் வரை சென்றும் சந்திக்க முடியாததால் பன்னீர் பெருத்த அவமானம் அடைந்தார்.

————————————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *