அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா பின்னர், சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராகவும் (முதல்-அமைச்சர்) தேர்ந்து எடுக்கப்பட்டதால்:முதல்வரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வாபஸ் பெறுவது என்பது முடியாது , சட்டத்தில் அதற்கு இடமில்லை…

The short URL of the present article is: http://parivu.tv/iiYny
- அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா பின்னர், சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராகவும் (முதல்-அமைச்சர்) தேர்ந்து
- எடுக்கப்பட்டதால், அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
- சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதமும் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது.ஆனால், முதல்-அமைச்சராக பதவி ஏற்குமாறு கவர்னரிடம் இருந்து சசிகலாவுக்கு உடனடியாக அழைப்பு வரவில்லை.
- இதற்கிடையே, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இதைத்தொடர்ந்து, அவரை அ.தி.மு.க.வின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார்.
- இதனால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது.
- இரு தரப்பினரும் கட்சியில் தங்களுக்கு ஆதரவை திரட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.
- இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பொறுப்பையும் சேர்த்து கவனிக்கும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவை, முதல் ஓ பன்னீர் செல்வம் சந்தித்தார்.
- இதன்பின்னர் சசிகலாவும் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து ஜனாதிபதி
- மாளிகை, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
- இத்தகைய பரபரப்பான சூழலில் பிபிசி இணையதளத்துக்கு பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி அளித்த பேட்டியில் ஓ பன்னிர்செல்வம் முதல் அமைச்சராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் என்று தெரிவித்துள்ளார்.
- தனது பேட்டியில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்ததாவது:- நிர்ப்பந்தத்துக்குப் பயந்து ராஜினாமா செய்திருந்தால், ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோழை, அவருக்கு திறமையில்லை , முதல்வராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர்.
- முதல்வரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வாபஸ் பெறுவது என்பது முடியாது , சட்டத்தில் அதற்கு இடமில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
—————————————————————————————————————————————————
???? ????? ???????? ???.??????? ??????????? ??????After his election as general secretary of the AIADMK Sasikalat has no place in the law
Leave a comment