ஆர்.கே.நகர் தொகுதியில் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டி…

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
ஆர்.கே.நகர் தொகுதியில் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டி…
The short URL of the present article is: http://parivu.tv/BXXgm
Share
  • ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பி.எஸ்., ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகிய 3 அணிகள் களத்தில் இறங்குகின்றன.
  • சசிகலா அணியில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 15-ந்தேதி ஆட்சிமன்ற குழு கூடுகிறது. ஓ.பி.எஸ். தரப்பும் புதிதாக ஆட்சி மன்ற குழுவை அமைத்துள்ளது.
  • இந்த 2 அணிகளும் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என போட்டி போட்டுக் கொண்டு கட்சிக்குள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
  • பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்ட முறையே தவறானது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். அணியினர் மனு கொடுத்துள்ளனர்.
  • அதுகுறித்து சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டதையடுத்து அதற்கு அத்தரப்பு சார்பில் பதில் மனுவும் கொடுத்துள்ளனர்.
  • இந்நிலையில் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன.
  • அ.தி.மு.க.வை பொறுத்த வரை இரட்டை இலை சின்னம் வெற்றியை நிர்ணயிக்கும் ஒரு மாபெரும் சக்தியாகும். அதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவே இரு அணிகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
  • ஆனால் வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் இந்த வி‌ஷயத்தில் இறுதிகட்ட முடிவை அறிவிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
  • அதனால் ஒ.பி.எஸ். அணியினர் இரட்டை இலை கிடைக்காதபட்சத்தில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
  • ஓ.பி.எஸ். அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் நிறுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
  • அவர் 1991-96 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தவர்.
  • தொகுதியில் நன்கு பரிச்சயமானவர். வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் அவரை நிறுத்தினால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஓ.பி.எஸ். அணியினர் கருதுகின்றனர்.

———————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *