இங்கே கிரிஜா; அங்கே நளினி…

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
இங்கே கிரிஜா; அங்கே நளினி…
The short URL of the present article is: http://parivu.tv/MJj97
Share
  • தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது உறவினர் நளினி நெட்டோ என்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தான், கேரள மாநில தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது புதிய செய்தி.
  • தமிழகத்தை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிரிஜா வைத்தியநாதன், நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகரின் தம்பி மனைவி; ரிசர்வ் வங்கியின் 18 வது கவர்னராக இருந்த எஸ்.வெங்கிடராமன் என்பவரின் மகள். அதே நேரத்தில், நளினி நெட்டோ, வெங்கிடராமனின் சகோதரி மகள். கிரிஜா மற்றும் நளினி இருவரும், 1981ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பேட்ஜை சேர்ந்தவர்கள்.
  • தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய கிரிஜா வைத்தியநாதன், கடந்த ஆண்டு டிசம்பரம், 22ம் தேதி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • அப்போது தலைமை செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீடு உள்ளிட்ட பல இடங்களில் வருமானவரி சோதனை நடந்தது. எனவே, அவருக்கு பதிலாக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். 
  • நளினி நெட்டோ தற்போது கேரளா மாநில அரசில் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
  • உள்துறை செயலாளர் என்ற பொறுப்பை கவனித்து வருகிறார். தற்போது கேரள தலைமை செயலாளராக இருக்கும் விஜயானந்த், வரும் 31ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக, நளினி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வரும், 1ம் தேதி பதவி ஏற்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் வரை அப்பொறுப்பில் இருப்பார். அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளாவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் தலைமை செயலாளர் பொறுப்பில் இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *