இந்தியாவின் நீண்ட மேம்பாலம் விரைவில் திறப்பு..!

By / 1 year ago / India, NEWS, Tamil Nadu / No Comments
இந்தியாவின் நீண்ட மேம்பாலம் விரைவில் திறப்பு..!
The short URL of the present article is: http://parivu.tv/nRUYL
Share
  • அருணாச்சல்லை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் நீண்ட மேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
  • இந்த மேம்பாலமானது, பிரம்மாபுத்திரா நதியின் மீது கட்டப்படுகிறது. அசாம் தலைநகர் கவுகாத்திக்கு 540 கி.மீ., தொலைவில் உள்ள சாடியா என்ற இடத்திலிருந்து அருணாச்சல் தலைநகர் இடாநகருக்கு 300 கி.மீ., தொலைவில் உள்ள டோலா என்ற இடம் வரை இந்த பாலம் கட்டப்படுகிறது. சுமார் 9 கி.மீ., தூரம் கட்டப்படும் இந்த பாலமானது, மும்பையல் உள்ள பந்தரா – வொர்லி இடையே கட்டப்பட்டள்ள பாலத்தை விட 30 சதவீதம் நீளமானது.
  • இந்த பாலத்தை கட்டும்பணி கடந்த 2011ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.950 கோடி மதிப்பில் துவங்கியது.
  • இந்த பாலம் திறக்கப்பட்டதும் அசாம் – அருணாச்சல் இடையிலான பயணம் சுமார் 4 மணி நேரம் குறையும். அசாம் அருணாச்சல் இடையே சிறிய அளவிலான சாலை தான் உள்ளது. மற்றபடி மக்கள் படகை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. 
  • இந்த பாலமானது ராணுவத்திற்கும் பெரிதும் பயனளிக்கும். இந்த வழியாக சீனா எல்லை ஒட்டியுள்ள அருணாச்சல் பகுதிக்கு விரைவில், எளிதாக செல்ல முடியும். டாங்குகள் செல்லும் வகையிலும் இ்நத பாலம் நிர்மாணம் செய்யப்படுகிறது. 

—————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *