இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

By / 1 year ago / Games, NEWS, World / No Comments
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
The short URL of the present article is: http://parivu.tv/PUPCm
Share
  • ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2–வது போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடந்த 3–வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதையடுத்து இந்த தொடர் தற்போது 1–1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

 

  • இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று தொடங்கியது. தோள்பட்டை காயம் குணம் ஆகாததால் விராட் கோலி போட்டியில் இருந்து விலகினார். விராட் கோலிக்கு பதிலாக ரகானே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • எதிர்பார்ப்பு நிறைந்த இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை ரென்ஷாவும் வார்னரும் துவக்கினர். ரென்ஷா(1 ரன்) வந்த வேகத்தில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் வார்னர் 56 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

 

  • இதன்பிறகு வந்த ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்ததது. மார்ஷ்(4 ரன்கள்), ஹண்ட்ஸ்கோம்ப்(8 ரன்கள்), மேக்ஸ்வெல்(8 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து நடையை கட்டினர்.  இருப்பினும் ஒருமுனையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் நங்கூரம் போல் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தார். சிறப்பாக ஆடிய ஸ்மித்  சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஸ்மித் அடிக்கும் 20 வது சதம் இதுவாகும்.ஆஸ்திரேலிய அணி 56 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இந்திய அணி தரப்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

                  ——————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *