இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம்: ஐஎம்எப் கணிப்பு…

By / 2 weeks ago / India, NEWS, parivu / No Comments
இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம்: ஐஎம்எப் கணிப்பு…
The short URL of the present article is: http://parivu.tv/mnVZT
Share

2018 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம்(ஐஎம்எப்) கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின், உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2017 ல் 6.7 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி 2018 ல் 7.3 சதவீதமாகவும், 2019 ல் 7.4 சதவீதமாக இருக்கும்.

முதலீடு அதிகரிப்பு காரணமாக ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் மற்றும் ஜிஎஸ்டி அமல் ஆகியவை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதையே பொருளாதார வளர்ச்சி காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி ஆணையத்தின் கணிப்புப்படி, பொருளாதாரம் வளரும் பட்சத்தில், உலகில், வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் வளர்ச்சியை விட நமது வளர்ச்சியானது நடப்பாண்டில் 0.7 சதவீதமும், 2019 ல் 1.2 சதவீதமும் அதிகரிக்கும்.

———————————————————————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *