உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரியாக திரிவேந்திரசிங் ராவத் பதவி ஏற்றுக்கொண்டார்.

By / 2 years ago / India, NEWS, Politics / No Comments
உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரியாக திரிவேந்திரசிங் ராவத் பதவி ஏற்றுக்கொண்டார்.
The short URL of the present article is: http://parivu.tv/006em
Share

 


  • நடைபெற்று முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 இடங் களில் அந்தக்கட்சி 57 இடங்களை வென்று, ஆட்சியை கைப்பற்றியது.
  • அங்கு முதல்-மந்திரி பதவிக்கு 3 முன்னாள் முதல்-மந்திரிகள் உள்பட 6 பேர் கடும் போட்டியில் இறங்கினர். அவர்களில் முன்னாள் மத்திய மந்திரி சத்பால் மகாராஜ், பிரகாஷ் பந்த் உள்ளிட்டவர்கள் அடங்குவர்.
  • இந்த நிலையில் சட்டசபை கட்சி தலைவரை (முதல்-மந்திரி) தேர்ந்தெடுப்பதற்கான பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், டேராடூனில் உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது. மத்திய பார்வையாளராக நரேந்திர சிங் தோமர் கலந்துகொண்டார்.
  • முதல்-மந்திரி பதவிக்கு திரிவேந்திரசிங் ராவத் (வயது 56) பெயரை பிரகாஷ் பந்தும், சத்பால் மகராஜூம் முன்மொழிந்தனர். மற்றவர்கள் வழிமொழிந்தனர். அதைத் தொடர்ந்து முதல்-மந்திரியாக திரிவேந்திர சிங் ராவத், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்த உடன் கவர்னர் கே.கே. பாலை தலைவர்கள் சந்தித்து, முதல்-மந்திரியாக திரிவேந்திரசிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவரை அரசு அமைக்குமாறு கவர்னர் கே.கே. பால் அழைப்பு விடுத்தார்.
  • இந்நிலையில் டேராடூன் அணிவகுப்பு மைதானத்தில் திரிவேந்திரசிங் ராவத்திற்கு கவர்னர் கே.கே.பால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அதே போல் மந்திரிகளுக்கும் கவர்னர் கே.கே.பால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
  • இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்-மந்திரியாக திரிவேந்திரசிங் ராவத் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

———————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *