உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது இருதரப்பு இடையே நடைபெற்ற மோதலினால் பதற்றம் ..!

The short URL of the present article is: http://parivu.tv/EgQ0V
- அமேதியின் பிபார்பூர் போலீஸ் நிலைய பகுதியில் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்ற போது, ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி மகிழ்ச்சி அடைந்தார்கள்.
- ராம்காஞ் கிராமத்தில் வண்ணப்பொடிகள் வீசப்பட்ட போது இருதரப்பு இடையே மோதல் வெடித்தது.
- இரு மதத்தை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீசார் சிறிய தடியடியை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
- பதற்றம் தணிக்கப்பட்டது. இருதரப்பும் கற்களை வீசியதால் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
- கற்கள் வீசப்பட்டதில் 7 பேர் காயம் அடைந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
- போலீஸ் கண்காணிப்பாளர் அனிஸ் கூடுதல் படையுடன் சம்பவ இடத்திற்கு சென்று நிலையை கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளார்.
- அப்பகுதியில் மத்திய படையும் அமர்த்தப்பட்டு உள்ளது. இப்போது நிலையானது கட்டுக்குள் உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அப்பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. கூடுதல் போலீஸ் அதிகாரிகள் அப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். பிரச்சனை தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Leave a comment