என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி தகவல்…

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி தகவல்…
The short URL of the present article is: http://parivu.tv/QWaTv
Share
 • ஜெயலலிதா சமாதியில் நேற்றிரவு திடீரென்று அமர்ந்து 40 நிமிடம் தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால்தான் ராஜினாமா செய்தேன். தொடர்ந்து தன்னந்தனியாக தொடர்ந்து போராடுவேன்.
 • ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என்று பரபரப்பு பேட்டியளித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.
 • அன்று நள்ளிரவே பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. அதன்பின், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
 • ஆட்சி ஒருவரிடமும், கட்சி ஒருவரிடமும் இருந்ததால், இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தனர். 
 • இந்தநிலையில் கடந்த 5ம் தேதி மூத்த அமைச்சர்களுடன் சசிகலா போயஸ்கார்டனில் ஆலோசனை நடத்தினார்.
 • அப்போது பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வதாக, அவர் எழுதிய கடிதம் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது.
 • அதன்பின், தலைமைக் கழகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில் சட்டப்பேரவை கட்சியின் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து வந்தது.ஜெ. சமாதியில் தியானம்.
 • ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்போது ஊட்டியில் இருந்ததால், உடனடியாக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அவரிடம் கொடுக்க முடியவில்லை.
 • பின் கவர்னர் டெல்லி சென்றார். அங்கிருந்து மும்பை சென்று விட்டார். அவர் எப்போது திரும்பி வருவார் என்பது உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. 
 • இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9 மணிக்கு, திடீரென்று ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர், திடீரென்று கண்களை மூடி சமாதி முன்பு அமர்ந்தார். தொடர்ந்து 40 நிமிடங்கள் தியான நிலையில் இருந்தார்.
 • பின்னர் தனது தியானத்தை முடித்துக் கொண்டு, சமாதியை ஒரு முறை சுற்றி வந்தார். பின்னர் மண்டியிட்டு வணங்கினார். அதன்பின் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.மவுனத்தை கலைத்தார்.
 • அந்த நேரத்தில் ஜெயலலிதா சமாதியை சுற்றிப் பார்க்க வந்திருந்தவர்கள், பன்னீர்செல்வத்தின் போராட்டத்தைப் பார்த்ததும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
 • இதனால் கூட்டம் அதிகமாக கூடியது. பன்னீர்செல்வம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட தகவல் வெளியானதும் ஏராளமான தொண்டர்களும் அங்கு கூடினர். 
 • இதனால், கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன் தலைமையில் போலீசாரும் குவிக்கப்பட்டனர். அதேநேரத்தில், பன்னீர்செல்வம், வீட்டுக்கு புறப்பட்டு சாலைக்கு வந்து கொண்டிருந்தார்.
 • ஆனால் ஏராளமான பத்திரிகையாளர்கள் கூடி, திடீர் தியானப் போராட்டத்துக்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர். கூட்டம் அதிகமாக இருந்ததால், 9.55 மணிக்கு தனது மவுனத்தை கலைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.
 • இதயதெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு நான் அமைதியாக என் மனசாட்சி தூண்டப்பட்டதால் அம்மாவின் ஆன்மா இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.
 • சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கும், புரட்சித் தலைவியின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். 
 • அம்மா நோய்வாய்ப்பட்டு, அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவருடைய உடல்நிலை மோசமான நிலையை எட்டியபோது, என்னை அழைத்து, உடல்நிலை மோசமாக இருக்கிறது. கட்சியும், ஆட்சியும் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றார்.
 • சசிகலா சொன்னார் எனவே கழக பொதுச்செயலாளராக மதுசூதனன் இருக்க வேண்டும், நீங்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்று சசிகலா சொன்னார்.
 • நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இரண்டு முறை, ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோது, அம்மா அவர்கள் என்னை அழைத்து முதல்வராக இருக்க சொன்னார்கள். சூழ்நிலை கருதி ஏற்றுக்கொண்டேன்.
 • அம்மா அவர்களுக்கு, மீண்டும் முதல்வர் பதவியை திருப்பிக்கொடுத்த மனநிலையே போதும். மீண்டும் ஒரு முறை அம்மா இல்லாத நேரத்தில், என்னால் அந்த பதவி ஏற்க முடியாது. எனக்கு வேண்டாம்.
 • வேறு யாராவது நீங்கள் முடிவு பண்ணி, கழகத்தின் உடன்பிறப்புகள், பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரை தேர்வு செய்யலாம் என்று சொன்னேன்.
 • ஆனால் அவர்கள் என்னை விடாப்படியாக உங்களைச் சொன்னால்தான், இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள்.
 • நீங்கள் இல்லாமல் இன்னொருவரை சொன்னால், இரண்டு முறை அம்மா அவர்களால் அடையாளம் காணப்பட்டவரை விடுத்து, இன்னொருவரை தேர்வு செய்திருக்கிறார்கள்.
 • என்ற விமர்சனம் கட்சிக்கு வந்து சேரும். அதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்ற நிலை உருவாகும். அது உங்களால் ஏன் உருவாக வேண்டும் என்றார். அதனால் நான் ஒப்புக்கொண்டேன்.

————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *