என் ஜாதிக்காரன் மேல கைய வச்சா உன் கை காலை உடைப்பேன்.. போலீஸை மிரட்டிய கருணாஸ்

By / 5 months ago / Politics / No Comments
என் ஜாதிக்காரன் மேல கைய வச்சா உன் கை காலை உடைப்பேன்.. போலீஸை மிரட்டிய கருணாஸ்
The short URL of the present article is: http://parivu.tv/9TJ3S
Share

சென்னை: எம்எல்ஏ கருணாஸ் தனது சமுதாயத்தினர் மீது கை வைக்கும் காவல்துறை அதிகாரிகளை கை காலை உடைப்பேன் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். முக்குலத்தோர் படைத்தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் வாய்க்கு வந்தபடி பேசி சர்ச்சையை கூட்டியுள்ளார். கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளூவர்கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காவல்துறை அதிகாரிகளை அவர் பேசிய விதமும் அவர்களுக்கு மிரட்டல் விடுத்த விதமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன பய வயசு கம்மி தி நகர் துணை கமிஷனர் அரவிந்தை கருணாஸ் விமர்சித்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி என்றும் இல்லாமல், சின்ன பய வயசு கம்மி, நல்ல ஆளு தமிழ்காரர். நல்லா வரனும்னு நாங்க நினைக்கிறோம். நீ பேட்டையில, கத்தியை காட்டி காசு கேக்குறோம்னு சொல்ற. ஒரு நாளைக்கு சரக்குக்கு ஒரு லட்சம் செலவு பண்றோம். வர்றவன் போறவனுக்கு பிரியாணி ஆக்கி போடுவதற்கு அவ்வளவு செலவு பண்றோம் என ஏக வசனத்தில் பேசினார் கருணாஸ்.

சாமிக்கே சாராயம் சரக்கு வாங்கி கொடுக்குறதும் சாப்பாடு போடுறதும் எங்கள் பாரம்பரியம் என்ற அவர் நாங்க சாமிக்கே சாராய பாட்டில் வைத்து சாமி கும்பிடுகிறவங்க. ஐபிஎஸ் படித்த படிப்புக்கே களங்கம் விளைவிக்கக்கூடிய கீழ்த்தரமான ஒரு செயலை செய்தவர் இந்த டிசி அரவிந்த் என்றார். நான் அன்னைக்கே அவர் டவுசர கழட்டிருப்பேன் என்றும் கொஞ்சமும் சலனம் இல்லாமல் விமர்சித்தார்.

காக்கி சட்டையை கழட்டிட்டு நல்ல அதிகாரின்னு சொல்றாங்க உனக்கு என்ன ஈகோ. நானா நீயான்னு போட்டு பார்க்கலாம். காக்கிச் சட்டையை கழட்டி வைச்சுட்டு வாங்க பார்ப்போம். நீயா நானான்னு பார்த்துக்கிறேன். அந்த அதிகாரம் தானே உங்களை இப்படி பண்ண வைக்கிறது. அந்த திமிர் தானே உங்களை இப்படி செய்ய வைக்கிறது என்றும் சரமாரியாக காய்ச்சினார் கருணாஸ்.

நான் கை காலை உடைப்பேன் ஒருத்தனை பிடித்தால் அவனை கையைக் காலை ஒடி என்று டிசி வடபழனி ஏசியிடம் சொல்கிறார். நான் இப்போது சொல்கிறேன் எங்க ஆளுங்க மேல கைய உடைக்கிறேன் காலை ஒடிக்கிறேன்னு வேலை வச்சீங்கன்னா உங்க கை காலை நான் உடைப்பேன். உங்களுக்கெல்லாம் போதை ஏத்தினாதான் கொலை செய்ய துணிச்சல் வரும் நாங்க பல்துலக்கும் நேரத்தில் செஞ்சிட்டு போயிட்டே இருப்போம் என்றும் மிரட்டல் விடுத்தார் கருணாஸ்.

வருந்துகிறேன் அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது தங்கள் மீது தேவையற்ற வழக்குகள் பதிந்ததால் ஆவேசத்தில் அப்படி பேசிவிட்டேன். தான் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கிலும் காயப்படுத்தும் வகையிலும் பேசியிருந்தால் வருந்துகிறேன். நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் அல்ல என அந்தர் பல்டி அடித்துள்ளார் கருணாஸ்.

—————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *