ஒரு அளவுதான் பொறுமை காப்போம் அதற்கு மேல் செய்யவேண்டியதை செய்வோம் சசிகலா எச்சரிக்கை..,

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
ஒரு அளவுதான் பொறுமை காப்போம் அதற்கு மேல் செய்யவேண்டியதை செய்வோம் சசிகலா எச்சரிக்கை..,
The short URL of the present article is: http://parivu.tv/fttCW
Share
  • ஓரளவுக்கு தான் பொறுமையைக் கையாள வேண்டும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலர் சசிகலா கூறியுள்ளார்.
  • போயஸ் தோட்ட வளாகத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களிடையே பேசிய சசிகலா, ஏராளமான தொண்டர்களையும, அதிமுகவையும் நான் பத்திரமாக காப்பாற்றுவேன் என்பதுதான் அம்மாவின் உறுதியான நினைப்பு.
  • புரட்சித் தலைவி ஜெயலலிதா பல சோதனைகளைத் தாண்டி கழகத்தைக் கட்டிக் காத்தார்கள். அதனுடைய பலன் இன்று இந்தியாவிலேயே அதிமுக மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது.
  • ஜெயலலிதா நம்மிடம் தான் இருக்கிறார். அவர் நம் கழகத்தில் உள்ள புல்லுருவிகளை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார். அப்படிதான் இன்று நடக்கும் சூழ்நிலைகள் நமக்குத் தெரிவிக்கிறது.
  • ஒன்றரை கோடி தொண்டர்கள் நம்முடன் இருக்கும் வரை நம்மை பிரித்தாள நினைக்கும் எவராக இருந்தாலும் தோற்றுப் போவார்கள்.
  • ஜெயலலிதா சொல்வது போல நம் இயக்கம் ஒரு எஃகு கோட்டை. அந்த கோட்டையை யாராலும் அசைக்க முடியாது.
  • பல சோதனைகளை கடந்து தான் அவர் இந்த இயக்கத்தை நடத்தி வந்தார். அதுபோல நமக்கும் இவ்வளவு பேர் துணை இருக்கும் போது நான் எதற்கும் அஞ்சப் போவதில்லை.
  • நியாயமாகவும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதால் கொஞ்சம் அமைதி காக்கிறேன்.
  • ஓரளவுக்கு தான் பொறுமையைக் கையாள வேண்டும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து  செய்ய வேண்டியதை செய்வோம் என்றார் சசிகலா.

——————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *