ஓ.பி.எஸ்.,க்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணை: ஐகோரட் கேள்வி

By / 3 months ago / NEWS, parivu, Politics / No Comments
ஓ.பி.எஸ்.,க்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணை: ஐகோரட் கேள்வி
The short URL of the present article is: http://parivu.tv/ccVsx
Share

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கு

இது தொடர்பாக திமுக எம்.பி., ஆர்எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவில், ஒ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, வாரிசுகள் மற்றும் சகோதரர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்துள்ளனர். தேனியில் பல இடங்களிலும், வெளிநாடுகளிலும், ஓ.பி.எஸ்சின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் பல நிறுவனங்களிலும் நிறுவனர்களாக உள்ளனர். சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் பன்னீர்செல்வம் பெயர் உள்ளது. வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறியிருந்தார்.

கோரிக்கை

இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்தமார்ச் மாதம் அளிக்கப்பட்ட திமுகவின் புகார் மனுவை தலைமை செயலருக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாக கூறினர்.

ஒத்திவைப்பு

அப்போது நீதிபதி, தலைமை செயலருக்கு அனுப்பினால் போதுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை என்ன செய்தீர்கள். 3 மாதங்களாக விசாரணை நடத்தியும் முன்னேற்றம் அடையவில்லை எனக்கேள்வி எழுப்பியதுடன், சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் உள்ளதால், வழக்கை ஏன் சிபிஐக்கு விசாரணைக்கு மாற்றக்கூடாது. வழக்கு தொடர்பாக, விவரங்கள் இருந்தால் சிபிஐயிடம் தெரிவியுங்கள் என கூறி, வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *