காவிரி விவகார ஆலோசனைக் கூட்டம் சித்தராமைய்யா புறக்கணிப்பு மஜதவுடன் மோதல் தொடருகிறதா?

By / 8 months ago / NEWS, parivu / No Comments
காவிரி விவகார ஆலோசனைக் கூட்டம் சித்தராமைய்யா புறக்கணிப்பு மஜதவுடன் மோதல் தொடருகிறதா?
The short URL of the present article is: http://parivu.tv/Xoa2e
Share

கர்நாடகாவில் காங்., கூட்டணியுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்திருந்தாலும், பல்வேறு காரணங்களால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதள கூட்டணியில் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக இதுவரை மவுனம் காத்து வந்த சித்தராமைய்யா, இன்று பதிலளித்துள்ளார். அதில், நான் அதிருப்தியில் இருக்கிறேன் என யார் சொன்னது. இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என தெரிவித்தார்.

இதற்கிடையில் பா.ஜ.,வின் எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் கூட்டணியில் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் பா.ஜ.,வில் சேர தயாராக இருப்பதாகவும் கூறினார். பா.ஜ.,விற்கு வரவும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்திருந்தார். பெங்களூரு விதான சவுதாவில் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, அமைச்சர்கள், நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள், எம்.பி.க்கள், காவிரி படுகையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள்,கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் சாதக-பாதகங்கள் மற்றும் மாநில நலனுக்காக சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் முன்னாள் முதல்வரும், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமைய்யா இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை இதனால் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியில் உரசல் இருப்பது உண்மையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *