காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20- ஆக அதிகரிப்பு…

By / 2 years ago / India, NEWS / No Comments
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20- ஆக அதிகரிப்பு…
The short URL of the present article is: http://parivu.tv/YST0F
Share
  • காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக கடந்த 3 நாட்களாக அவ்வப்போது பனிச்சரிவு ஏற்படுகிறது. குரேஷ் பகுதியில் 4 முகாம்கள் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 14 ஆக உயிரிழந்துள்ளது.
  • இந்த பனிச்சரிவில் சிக்கி 2 தமிழக ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தகுடி கீழையுரை சேர்ந்த இளவரசனும் ஒருவர். மற்றொருவர் மதுரையை சேர்ந்த சுந்தர் பாண்டி என்ற வீரர் ஆவார்.
  • பனிப்பாறைகள் சிதறி விழுந்த இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதையுண்டு கிடந்த ராணுவ வீரர்களில் ஒருவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.
  • மாயமான 4 ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளன. பனிச்சரிவுக்கு பலியானவர்களில் 6 பேர் பந்திப்போரா, பாரமுல்லா மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆவர்.
  • மலைப்பாங்கான பகுதிகளில் பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு அதிகளவில் இருப்பதால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

—————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *