குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளநிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டை பயன்படுத்துகிறார்கள் என தகவல்…

By / 2 years ago / India, NEWS / No Comments
குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளநிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டை பயன்படுத்துகிறார்கள் என தகவல்…
The short URL of the present article is: http://parivu.tv/UAbeX
Share
  • நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. புதுடெல்லி பாதுகாப்பு படையின் வளையத்திற்குள் வந்து உள்ளது.
  • “பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய ஆப்கானிஸ்தான் அடையாள அட்டைகளை பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள், அவர்களில் சிலர் மோசடியாக ஆப்கானிஸ்தானின் பாஸ்போர்ட்டை பெற்று உள்ளனர்,” என்ற தங்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது.
  • பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அமைதியின்மையை ஏற்படுத்த விரும்புகிறது என தகவல்கள் தெரிவித்து உள்ளன.
  • கடந்த வருடம் இந்தியாவிற்கு பயணம் செய்த இரு ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை பிடித்து இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இது தொடர்பான தகவல்கள் தெரியவந்து உள்ளது எனவும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.
  • பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தேர்வு செய்து உள்ளது, அவர்களுக்கு பயிற்சி அளித்து இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க பயன்படுத்துகிறது என இந்திய உளவுத்துறை நம்புகிறது.
  • டெல்லி ராஜபாதையில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் சோதனை செய்ய சிறப்பு பாதுகாப்பு படையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
  • ஏற்கனவே பயங்கரவாத இயக்கங்களின் நகர்வை தீவிரமாக கண்காணித்து வரும் உளவுத்துறை தகவல்கள், பயங்கரவாதிகள் பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலை போன்று டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்று தெரிவித்தன.
  • ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கையினால் ஈர்க்கப்பட்ட இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் குடியரசு தின விழாவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளன என உளவுத்துறை தகவல்கள் வெளியாகின.

—————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *