கேரளாவிற்கு மேலும் குஜராத், ஜார்க்கண்ட், மராட்டியம் மாநில அரசுகள் நிதியுதவி…

By / 2 months ago / India, NEWS, parivu, Tamil Nadu / No Comments
கேரளாவிற்கு மேலும் குஜராத், ஜார்க்கண்ட், மராட்டியம் மாநில அரசுகள் நிதியுதவி…
The short URL of the present article is: http://parivu.tv/fSmn8
Share

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ரகுபர் தாஸ் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு குஜராத் அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மராட்டிய அரசு சார்பில் ரூ.20 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

சட்டீஸ்கர் முதல்-மந்திரி ராமன் சிங் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் வெள்ள நிவாரண நிதியுதவி வழங்கி வருகின்றது.

————————————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *