கேரளாவில் வெள்ளம்: சுற்றுலாவில் அமைச்சர்…

By / 6 months ago / India, NEWS, parivu, Politics / No Comments
கேரளாவில் வெள்ளம்: சுற்றுலாவில் அமைச்சர்…
The short URL of the present article is: http://parivu.tv/tsYq5
Share

கேரளா கனமழை மற்றும் வெள்ளத்தினால் தத்தளிக்கும் நிலையில், மாநில அமைச்சர் கே.ராஜூ, ஜெர்மனி சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தத்தளிப்பு

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அரசில், வனத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் கே.ராஜூ.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர், புனலூர் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்.

100 ஆண்டுகளுக்கு பின் பெய்யும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கேரளா தத்தளித்து வருகிறது.

324 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடு பயணம்

இந்நிலையில், உலக மலையாள கவுன்சில் சார்பில் ஜெர்மனியில் நடக்கும் 11வது சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ராஜூ, கடந்த 16ம் தேதி சென்றுள்ளார்.

அவருடன் பொன்னானி தொகுதி எம்.பி., முகமது பஷீர்( இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) மற்றும் பட்டாம்பி தொகுதி எம்எல்ஏ முகமது ஹூசைன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோரும் உடன் சென்றனர்.

திரும்புகிறார்

கேரளாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், அமைச்சர் வெளிநாடு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை உடனடியாக நாடு திரும்ப கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு செல்ல கட்சி மேலிடத்திடம் ராஜூ அனுமதி கேட்ட போது, முடிவை அவரே எடுத்து கொள்ளலாம் எனஅனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மறுப்பு

அமைச்சர் திரும்பி வர கட்சி மேலிடம் உத்தரவிட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள அவரின் அலுவலகம், அவராகவே முடிவு செய்து திரும்பி வருவதாகவும், நிலைமை இவ்வளவு மோசமாகும் என அவர் நினைத்து பார்த்தது இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

—————————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *