கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை

By / 3 months ago / NEWS, parivu / No Comments
கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை
The short URL of the present article is: http://parivu.tv/TtZuh
Share

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கேரளாவில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை ஜூலை 13 ம் தேதி முதல் பல பகுதிகளில் 14 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு அருகே உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு, 35 முதல் 60 கி.மீ., வேகத்தில் மேற்கு நோக்கி காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு மலப்புரம், கன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும்

இதனால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13 முதல் அனைத்து தாலுகா கட்டுப்பாட்டு அறைகளும் உஷார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *