கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கனமழை: 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை

By / 3 months ago / India, NEWS, parivu / No Comments
கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கனமழை: 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை
The short URL of the present article is: http://parivu.tv/etDCx
Share

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை அண்மையில் கேரளா சந்தித்தது.. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாநிலத்தில், பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதந்தன. கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளா தற்போது முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்த சூழலில், கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பத்தினம் திட்டம், இடுக்கி, வயநாடு, திரிசூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

_103068199_048704892-1

மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் 64.4 மி.மீட்டர் முதல் 124.4 மி.மீட்டர் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மாநில பேரிடர் மேலாண்மை துறை விழிப்புடன் இருக்குமாறு முதல் அமைச்சர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

—————————————————————————————————————————————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *