கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் விடுமுறை: செங்கோட்டையன் தகவல்

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் விடுமுறை: செங்கோட்டையன் தகவல்
The short URL of the present article is: http://parivu.tv/v4R9h
Share
  • வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முனுகூட்டியே விடுமுறை விட அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
  • ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
  • ஏப்ரல் 21-க்கு பிறகு வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். 
  • விடுமுறை அறிவிப்பு குறித்து நாளை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும். ஏப்ரல் 21-30 வரை தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
  • அதேபோல் தனியார் பள்ளிகளுக்கு சிறப்பு வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
  • முன்னதாக தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
  • 6390 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ல் தகுதி தேர்வு தொடங்கும் என்று கூறினார். தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று கல்வி அமைச்சகர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *