கோரிக்கைகளுக்காக ஜந்தர் மந்தரிலேயே விவசாயிகள் வீரமரணம் அடையவும் தயார் : அய்யாகண்ணு…

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
கோரிக்கைகளுக்காக ஜந்தர் மந்தரிலேயே விவசாயிகள் வீரமரணம் அடையவும் தயார் : அய்யாகண்ணு…
The short URL of the present article is: http://parivu.tv/ggB0H
Share
  • விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்பதில்லை என அய்யாகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
  • கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 28 நாட்களாக தலைநகர் டெல்லிக்கே வந்து போராடும் தங்களை பிரதமர் சந்திக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • பிரதமரை முதலில் சந்திக்க அனுமதிப்பதாக கூறி அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்று விட்டு, பின்னர் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
  • இதன் காரணமாகவே விரக்தியின் உச்சத்தில் இருந்த தாங்கள் நிர்வாணமாக ஓடி, தரையில் புரண்டு போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார். 
  • மேலும் பேசிய அய்யாகண்ணு விவசாயிகளை அரசு நிர்வாணமாக்கிவிட்டதாக கடுமையாக குற்றம்சாட்டினார்.
  • கோரிக்கைகளை சிறிதும் காது கொடுத்தும் கேட்காமல் உள்ள மத்திய அரசு, விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்க பார்க்கிறதா என வினவியுள்ளார்.
  • தங்களது  கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  • மேலும் தாங்கள் நிறைவேற்ற கோரும் கோரிக்கைகளுக்காக டெல்லி ஜந்தர் மந்தரிலேயே வீரமரணம் அடையவும் விவசாயிகள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
  • நாங்கள் உயிரை விட்டால் தான் அரசு விவசாயிகளை கவனிக்கும் என்றால் அதற்கும் தயாராக இருப்பதாக அய்யாகண்ணு கூறினார்.  

—————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *