சிபிஎஸ்இ சர்வாதிகாரம்: ஐகோர்ட் கிளை கண்டனம்

By / 3 months ago / NEWS, parivu / No Comments
சிபிஎஸ்இ சர்வாதிகாரம்: ஐகோர்ட் கிளை கண்டனம்
The short URL of the present article is: http://parivu.tv/HkSSi
Share

நீட் தேர்வு வினாக்களில் தமிழிலில் மொழி பெயர்ப்பு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது. அதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நடந்து வருகிறது.

இவ்வழக்கை, இன்று விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு வினாக்களில் தமிழ் மொழி பெயர்ப்பு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. கேள்விகளுக்கான விடைகளை பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்கிறீர்களா? பெரும்பான்மையை காரணம் காட்டி தவறான விடைகளை கூட சிபிஎஸ்இ ஏற்கிறது.
பீகாரில் மட்டும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றது எப்படி? வழக்கு விசாரணைக்கு வருவது தெரிந்தும் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பி உள்ளனர்.

தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *