சிரியாவில் விஷவாயு தாக்குதல் நடத்தியது கிளர்ச்சியாளர்கள் என்ற ரஷியாவின் குற்றச்சாட்டு மேற்கத்திய நாடுகள் தரப்பில் நிராகரிக்கப்பட்டது…

By / 2 years ago / NEWS, World / No Comments
சிரியாவில் விஷவாயு தாக்குதல் நடத்தியது கிளர்ச்சியாளர்கள் என்ற ரஷியாவின் குற்றச்சாட்டு மேற்கத்திய நாடுகள் தரப்பில் நிராகரிக்கப்பட்டது…
The short URL of the present article is: http://parivu.tv/DR7n3
Share

 


  • சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
  • இந்தப் போரின்போது சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் அவ்வப்போது ஈடுபடுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது. உள்நாட்டு எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றன. 
  • இதை சிரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கு குளோரின் வாயு தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அங்கு இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் போர் விமானங்கள் சற்று தாழ்வாக பறந்து வி‌ஷ வாயு தாக்குதல் நடத்தின. இந்த வி‌ஷ வாயு தாக்குதலில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி பிணங்களாகினர்.
  • 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். குழந்தைகள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு சிரிய மற்றும் ரஷிய ராணுவம் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது, 
  • ஆனால் ரஷியா தரப்பில் சிரிய ராணுவம் பயங்கரவாதிகள் வைத்திருந்த பயங்கர வெடிப்பொருட்களை அழிக்கதான் தாக்குதல் நடத்தியது, அங்கு விஷவாயு வைத்திருந்தது கிளர்ச்சியாளர்கள் படைதான் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ள ரஷியா தொடர்ச்சியாக கிளர்ச்சியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
  • இதற்கிடையே சிரியா, எங்களது ராணுவம் விஷவாயு தாக்குதலை நடத்தவில்லை என முற்றிலுமாக மறுத்துவிட்டது. ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் சிரிய ராணுவம் தான் விஷவாயு தாக்குதல் நடத்தி உள்ளது என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறிஉள்ளன.

——————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *