சிரியாவில் ‘விஷவாயு தாக்குதல்’: 9 குழந்தைகள் உட்பட 35 பேர் பலி..!

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
சிரியாவில் ‘விஷவாயு தாக்குதல்’: 9 குழந்தைகள் உட்பட 35 பேர் பலி..!
The short URL of the present article is: http://parivu.tv/Ky5TW
Share
  • சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் கலவரக்காரர்கள் ஆதிக்கம் நிறைந்த கான் ஷேக்குதீன் பகுதியில் விமானங்கள் மூலம் விஷ வாயு செலுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
  • இத்தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 35 பேர் பலியாகினர். பலரும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டனர்.
  • தாக்குதல் நடந்துள்ளதை, சிரியாவில் மனித உரிமை மீறல் தொடர்பான கண்காணிப்பை மேற்கொண்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
  • இருப்பினும், இத்தாக்குதலுக்கு எந்த மாதிரியான நச்சு வாயு பயன்படுத்தப்பட்டது என்பதை அந்த அமைப்பு உறுதி செய்யவில்லை.
  • தாக்குதலில் பலியான 35 பேரில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்களே. இவர்களில் 9 குழந்தைகளும் அடங்குவர்.
  • இதற்கிடையில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாக்குதலில் வீரியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
  • இட்லிப் மாகாணம் அல் குவைதா ஆதரவு அமைப்பான ஃபதே அல் ஷாம் முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
  • இதனால், இப்பகுதியில் அடிக்கடி ரஷ்ய விமானங்களும், அமெரிக்க கூட்டுப்படைகள் விமானமும் தாக்குதல் நடத்துவது வழக்கம்.
  • அண்மையில் ஹமா மாகாணத்தில் அதிபர் பஷார் அல் அசாத் ஆதரவுப் படைகள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  • இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்துள்ள தாக்குதலை அரசே நடத்தியிருக்க வேண்டும் என எதிர்தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *