சிவப்பு, நீல சைரன் விளக்குகளை பயன்படுத்த கட்டுப்பாடு: முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பயன்படுத்த தடை…

By / 2 years ago / India, NEWS, Politics, Tamil Nadu, vip / No Comments
சிவப்பு, நீல சைரன் விளக்குகளை பயன்படுத்த கட்டுப்பாடு: முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பயன்படுத்த தடை…
The short URL of the present article is: http://parivu.tv/QJ36g
Share
  • விஐபி கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாட்டின் உயர்பதவி வகிக்கும் 5 பேரை தவிர மற்றவர்கள் காரில் சிவப்பு மற்றும் நீல விளக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மே மாதம் 1-ம் தேதி முதல் இந்த தடையை அமல்படுத்துவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் ஆகியோர் மட்டுமே காரில் சிவப்பு விளக்குகளை பயன்படுத்தலாம்.
  • மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் இனி காரில் சிவப்பு அல்லது நீல  விளக்குகளை பயன்படுத்த இயலாது. 
  • இதேபோல தேர்தலில் எந்த சின்னத்துக்கு வாக்கு அளிக்கும் என்பதை அறிந்து கொள்ளும் விவிபாட் வசதி கொண்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • தேர்தல் ஆணையத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் வாங்க ஏற்கனவே 2 தவணைகளாக 1009 கோடி ரூபாய் மற்றும் 9200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை வாக்குப்பதிவு இயந்திரங்களில் கொண்டுவர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
  • அதன் படி தயாராகும் புதிய இயந்திரங்கள் வரும் அடுத்த ஆண்டில் இருந்து பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *