சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா தலாய்லாமா அருணாசலப் பிரதேசம் செல்வதை உறுதிசெய்து உள்ளது…

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா தலாய்லாமா அருணாசலப் பிரதேசம் செல்வதை உறுதிசெய்து உள்ளது…
The short URL of the present article is: http://parivu.tv/3xLZf
Share
 • திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது.
 • திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார்.
 • இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து எல்லையில் சில பகுதிகளைக் கைப்பற்றியது.
 • இப்போது வரை தலாய் லாமாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றே சீனா வலியுறுத்தி வருகிறது. 
 • இதற்கிடையில், அருணாச்சல முதல்-மந்திரி பெமாகண்டு அழப்பின் பேரில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் செல்கிறார்.
 • மாநிலத்துக்கு இந்தியத் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செல்வதை சீனா தொடர்ந்து ஆட்சேபித்து வருகிறது.
 • இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ராகுல் வர்மா அண்மையில் அருணாசலப் பிரதேசத்துக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
 • இந்நிலையில், தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் செல்வதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 • மாநில அரசு தலாய் லாமாவிற்கு கடந்த ஆண்டு விடுத்த அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்வதற்கு மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அனுமதி அளித்தது.
 • அதற்கு சீனா ஆட்சேபமும், கவலையும் தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்தியா தரப்பில் தலாய் லாமா பயணம் மேற்கொள்வதைத் தடுக்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டு விட்டது.
 • தலாய் லாமா, அருணாசலப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்ளும்போது அவரை இந்திய அரசுப் பிரதிநிதிகள் சந்திப்பார்கள் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  
 • இந்நகர்வானது, மத்திய அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது. 
 • கடந்த காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பெய்ஜிங்கை கோபப்படுத்த இந்தியா தயங்கியது.
 • தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் செல்வதை எதிர்த்துவரும் சீனா, பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் இருதரப்பு உறவில் கடும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்தது.
 • சீன வெளியுறவு அமைச்சகம், விரைவில் தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் செல்கிறார் என்ற செய்தியானது பெரும் கவலையை தருகிறது என கூறியது.
 • சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் பேசுகையில், சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு தலாய் லாமா செல்வதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
 • சீன-இந்திய எல்லையில் கிழக்குப்பகுதி தொடர்பான தகராறு விஷயத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
 • தலாய் லாமா தலைமையிலான சிறிய குழுவினர், சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளனர்.
 • எல்லை தொடர்பான அவர்களது நிலைப்பாடு சரியானதல்ல. இந்த விவகாரத்தில் சீனா தனது கவலையை உரிய முறையில் இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
 • தலாய் லாமா விவகாரத்தின் தீவிரத்தன்மை மற்றும் சீன-இந்திய எல்லைப் பிரச்னை ஆகியவை குறித்து இந்தியா முழுமையாக அறிந்துள்ளது.
 • இந்தப் பின்னணியில், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வருமாறு தலாய் லாமாவை இந்தியா அழைத்தால் அது எல்லைப்பகுதியில் அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை பாதிப்பதோடு, இந்திய-சீன உறவுகளையும் பாதிக்கச் செய்து விடும் என்றார்.
 • தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்திற்கு செல்வதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்தியா அதனை கண்டுகொள்ளவில்லை. 
 • சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா தலாய்லாமா அருணாசலப் பிரதேசம் செல்வதை உறுதிசெய்து உள்ளது.
 • திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, அருணாசலப் பிரதேசத்துக்கு ஏப்ரல் 4 முதல் 13-ம் தேதி வரை மதரீதியிலான பயணத்தை மேற்கொள்வார்.
 • மதச்சார்பற்ற ஜனநாயகம் என்ற முறையில் இந்த நாட்டின் எந்தப் பகுதிக்கும் அவர் பயணம் மேற்கொள்வதைத் தடுக்கப் போவதில்லை.
 • தலாய் லாமா, அருணாசலப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்ளும்போது அவரை இந்திய அரசுப் பிரதிநிதிகள் சந்திப்பார்கள் என்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 • கடந்த டிசம்பர் மாதம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜியை தலாய் லாமா சந்தித்து பேசியதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
 • தலாய் லாமா எந்த நாட்டு அதிகாரியுடன் பேசினாலும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறியிருந்தது சீனா.

————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *