சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் குறித்த தகவல்களை 2019ம் ஆண்டில் பெற்றுவிடுவோம்: பியூஷ் கோயல்

By / 2 months ago / India, NEWS, parivu / No Comments
சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் குறித்த தகவல்களை 2019ம் ஆண்டில் பெற்றுவிடுவோம்: பியூஷ் கோயல்
The short URL of the present article is: http://parivu.tv/I4dJS
Share

சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் குறித்து தகவல்களை 2019ம் ஆண்டில் பெற்றுவிடுவோம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் முன்பை விட அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினரின் டெபாசிட் விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியர்களின் பணம் 101 கோடி பிராங்க்குகள் (சுமார் 7,000 கோடி) என தெரிவித்துள்ளது. இதில் 99.9 கோடி பிராங்க் (6,891 கோடி) நேரடியாகவும், பண்ட் மேலாளர்கள் மூலம் 1.62 கோடி கோடி பிராங்க்குகளாகவும் (112 கோடி) உள்ளது.

இதன்படி இந்தியர்களின் டெபாசிட் 50.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே அமைச்சரும், நிதியமைச்சகத்தின் பொறுப்பைக் கவனித்து வருபவருமான பியூஷ் கோயலிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், 2019 நிதியாண்டு இறுதிக்குள் சுவிச்சர்லாந்து நாட்டுக்கு முறைகேடாக பணம் அனுப்பியவர்கள், வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பெற்றுவிடுவோம் என கூறினார். மேலும், இந்தியா – சுவிச்சர்லாந்து அரசுகள் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 2018 ஜனவரி 1ம் தேதி முதல் நிதியாண்டின் இறுதி வரை எல்லா தகவல்களும் நாள் பெறுவதற்கு தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கோயல் தெரிவித்துள்ளார்.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *