சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்.. இடைத்தேர்தல்கள் குறித்து ஆலோசனை!

By / 2 weeks ago / DMK / No Comments
சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்.. இடைத்தேர்தல்கள் குறித்து ஆலோசனை!
The short URL of the present article is: http://parivu.tv/ZG6Wk
Share

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர் தலைமையில் இன்று அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விழுப்புரத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழா குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்ககப்படவுள்ளதாக தெரிகிறது.

மேலும் கடந்த 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்திய மு.க அழகிரி, “பேரணியில் பங்கேற்ற 1 1/2 லட்சம் பேர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?” என மறைமுகமாக ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கட்சி நிர்வாகிகள் யாரும் அழகிரி பேரணியில் பங்கேற்றனரா? என்ற விசாரணையையும் ஸ்டாலின் நடத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அப்படி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது தெரிய வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

———————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *