சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த ஓராண்டாக துணைவேந்தர் இல்லாததால் மாணவர்கள் பட்ட சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு…

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த ஓராண்டாக துணைவேந்தர் இல்லாததால் மாணவர்கள் பட்ட சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு…
The short URL of the present article is: http://parivu.tv/C52rA
Share
  • சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த ஓராண்டாக துணைவேந்தர் இல்லாததால் மாணவர்கள் பட்ட சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
  • அண்ணா பல்கலைகழகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் சுமார் 600 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
  • அண்ணா பல்கலைகழகத்தின் தணை வேந்தராக இருந்த ராஜா ராமின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்து விட்டது.
  • அதன் பிறகு துணை வேந்தர் யாரும் நியமிக்கப்படாததால், வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடைபெற வேண்டிய பட்டமளிப்பு விழா இதுவரை நடைபெறவில்லை.
  • இதனால் 2016 – 17-ம் ஆண்டு இளநிலை படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கவி்ல்லை.
  • வெளிநாடு சென்று படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள், சான்றிதழ்கள் வழங்கப்படாததால் செய்வதறியாது திகைப்பில் உள்ளனர். 
  • அதே போல் MBA, MCA போன்ற பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கும், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவ, மாணவிகளுக்கும் இதே நிலையே ஏற்பட்டுள்ளது.
  • பட்டமளிப்பு சான்றிதழ் பெற முடியாததால் மாணவர்கள் வேலைக்கு செல்லுவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • இதே நிலையே தமிழகத்தில் உள்ள பல பல்கலைகழகங்களில் காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.  

——————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *