சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்களின் போராட்டம் விடிய விடிய தொடர்கிறது…

By / 1 year ago / Games, NEWS, Tamil Nadu / No Comments
சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்களின் போராட்டம் விடிய விடிய தொடர்கிறது…
The short URL of the present article is: http://parivu.tv/heEMp
Share
  • அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி என்றாலும், போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். முதலமைச்சர் அறிக்கை தரும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு திட்டவட்டமாக தெரிவித்தனர். முதல்வரின் அறிக்கையை பொறுத்தே போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பீட்டாவுக்கு தமிழ் கலாச்சாரம் எதும் தெரியாது என்று குற்றம் சாட்டினர்.
  • சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்களின் போராட்டம் விடிய விடிய தொடர்கிறது. அமைச்சர்களுடன் நடத்தி பேச்சுவார்த்தைக்கு பிறகும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இளைஞர்களுடன் பெண்களும் விடிய விடிய நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போராட்ட களத்துக்கு நேரில் வர வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அலங்காநல்லூரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி கைதானவர்களை விடுவிக்கக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திருநெல்வேலி மாவட்டத்திலும் இளைஞர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லையில் இணையதளம் மூலம் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து நேற்று மாலை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

——————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *