சென்னை மெரினா கடற்கரையிலும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் விலக்கிக் கொள்ளப்பப்பட்டு இயல்பு நிலை…

By / 2 years ago / Tamil Nadu / No Comments
சென்னை மெரினா கடற்கரையிலும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் விலக்கிக் கொள்ளப்பப்பட்டு இயல்பு நிலை…
The short URL of the present article is: http://parivu.tv/rmUa3
Share
  • சென்னை மெரினா கடற்கரையிலும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் விலக்கிக் கொள்ளப்பப்பட்டு இயல்பு நிலை இன்று திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 1 வாரமாக இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்தை உற்று நோக்கிய தமிழக அரசு, அதற்கு  கோரிக்கையான நிரந்தர சட்டத்தை நேற்று தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிவிட்டது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பப்பட்டது. ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டமானது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
  • சுமார் 9 லட்சம் மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது படிப்படியாக அந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது ஒரு 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் இன்னும் அந்த மெரினா கடற்கரையில் போராட்டக் களத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
  • மாணவர்களுடைய போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்கள். மாணவர்களுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் என்ன சட்டம் நிறைவேற்றியிருக்கிறது குறித்த ஒரு விளக்கத்தை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருந்தனர்.
  • அதன் பேரில் தலைமை நீதிபதியும் காவல்துறையினருக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறார்கள். மாணவர்களுக்கு என்ன சட்டம் நிறைவேற்றியிருக்கிறது குறித்த ஒரு விரிவான ஆலோசனை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும், அது காவல்துறையினரின் பொறுப்பு. அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு போராட்டக்காரர்கள் ஈடுபடகூடாது.
  • அதற்கு காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அளித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஓய்வு பெற்ற நீதிபதியும் இந்த போராட்டக்காரர்களிடம் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டதன் விளக்கத்தை சரியாக அளித்திருக்கிறார்கள்.
  • அதன்படி மாணவர்கள் இன்னும் சில மணி நேரங்களில் மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்ததை நடத்துவதாக உள்ளனர். அதனையடுத்து மாணவர்கள் அந்த போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஏனென்றால் இன்னும் 2 தினங்களில் குடியரசு தினத்துக்கான ஒத்திகை இந்த காமராஜ் சாலையில் நடைபெற இருக்கிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்து தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதனால் இன்னும் சில மணி நேரங்களில்
  • மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1 வாரமாக ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும், தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்ற இளைஞர்களின் கோரிக்கை வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.

—————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *