சேலம் அருகே இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளை: திருப்பதி சென்றிருந்த போது மர்மநபர்கள் கைவரிசை…

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
சேலம் அருகே இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளை: திருப்பதி சென்றிருந்த போது மர்மநபர்கள் கைவரிசை…
The short URL of the present article is: http://parivu.tv/8aBJR
Share
 • சேலம் அருகே கிச்சிப்பாளையத்தில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
 • சேலம் மாநகரின் மத்திய பகுதியான கிச்சிப்பாளையத்தில் செவாப்பேட்டையில் தேவி அண்ட் கோ என்ற ஃபிலை உட் கடை வைத்திருக்கும் அத்தியப்பன் என்றவர் குடியிருந்தார், அவர் ஒரு தொழிலதிபராகவும் இருந்துள்ளார். கடந்த நில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
 • அதனால் அவரது மனைவி விஜயலட்சுமி, மற்றும் விஜயலட்சுமியின் தம்பி பாஸ்கர் ஆகியோர் வீட்டில் வசித்து வருகின்றனர். 
 • இந்நிலையில் அவர்கள் திருப்பதி சென்றுவிட்டு இன்று காலை வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்குள் வந்தபோது வீட்டின் பின்புறத்தில் உள்ள பாத்ரூமின் கதவை அறுத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர் என்பது தெரியவந்தது.
 • அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை பார்த்தபோது, வீட்டில் இருந்து 720 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
 • இதனையடுத்து சேலம் மாநகர் கிச்சிப்பாளைய காவல்துறையினர் இந்த வீட்டில் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் மோம்பநாய் மூலம் தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். 
 • மையப்பகுதியில் உள்ள ஒரு பகுதியில் வீட்டின் கதவை அறுத்து இச்சம்பவம் அறங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 • அதுமட்டுமில்லாமல் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள், ஒரு துண்டு சீட்டில் எழுதி வைத்து சென்றிருக்கின்றனர்.
 • அதாவது, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வெளியில் தகவல் தெரிவித்தால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் கடிதத்தை எழுதி வைத்து சென்றனர்.
 • இதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் சில இடங்களில் எழுமிச்சை பழம், குங்குமங்களை தூவி விட்டு மந்திர பூஜை நடத்தியது போல இந்த திருட்டை அரங்கேற்றியுள்ளனர். 
 • கிச்சிப்பாளையம் என்றாலே நகை கடை, இரும்பு கடை ஆகிய தொழிலதிபர்கள் வசித்து வரும் பகுதியாகும்.
 • இப்பகுதியில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதே இல்லை. முதல் முறையாக நிகழ்ந்த இந்த நூதன திருட்டால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
 • மேலும் இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை எடுத்து அதில் ஏதாவது பதிவு ஆகி உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *