சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
The short URL of the present article is: http://parivu.tv/5XJBY
Share
  • சேலம் இரும்பு ஆலையை தனியாருக்கு விற்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
  • சேலம் இரும்பு ஆலையை தனியாருக்கு விற்றால் பொதுமக்கள் இடையே கிளர்ச்சி ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • 40 ஆண்டுகளுக்கு முன் 9 கிராம மக்களின் நிலத்தை கையகப்படுத்தி இரும்பாலை உருவாக்கப்பட்டது. 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அரசு நிறுவன இரும்பாலையை தினயாருக்கு விற்பது தவறு என்றும் பழனிசாமி சுட்டுக்காட்டியுள்ளார்.
  • சேலம் இரும்பாலையில் 2,000 பேர் பணியாற்றி வருகின்றனர். சேலம் இரும்பாலை விரிவாக்கத்துக்கு ரூ.2,005 கோடியை தமிழக அரசும் வழங்கியுள்ளது என்றும் முதல்வர் அக்கடிதத்தில் கூறியுள்ளார். 
  • நஷ்டத்திற்கான காரணங்களை கண்டறிந்து ஆலையை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தனியார் மயமாக்க முடிவு செய்திருந்தால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பது பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய உருக்குத்துறை அமைச்சத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

———————————————————————————————————————————————————– 

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *