சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை…

By / 3 months ago / India, NEWS, parivu / No Comments
சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை…
The short URL of the present article is: http://parivu.tv/55qXh
Share

சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் இன்று இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது.

அதில் 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், 8 வழிச்சாலைக்கு வழித்தடங்கள் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் அதிருப்தி

மத்திய அரசின் பதில் மனுவில் முரண்பாடுகள் உள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 8 வழிச்சாலை அமைய உள்ள இடத்தில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த அரசு மரம் வெட்டியதாக 5 அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது.

மேலும் அதில் 2 அரசு அதிகாரிகள் ஜாமினில் வெளிவந்துள்ளதாகவும் அரசு தெரிவித்தது. இதற்கு 2 அரசு அதிகாரிகளின் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரின் குற்றப்பின்னணி பற்றி அறிக்கை தரவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகையில் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழி பசுமைச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்தது.

இந்த சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தில் மாற்றம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. வனப்பகுதியில் 70 மீட்டர் அகலத்திற்கு செல்ல இருந்த சாலையை 50 மீட்டர் அகலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

———————————————————————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *