ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா கருத்து;போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்…

By / 2 years ago / Cinema, NEWS, Tamil Nadu / No Comments
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா கருத்து;போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்…
The short URL of the present article is: http://parivu.tv/57mop
Share
  • மதுரை அலங்காநல்லூரில் சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காளை மாடுகளை பறிமுதல் செய்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டு தீ போல பரவியது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு பல தரப்பிலும் ஆதரவு பெருகி வருகின்றன.
  • இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் சூர்யா தெரிவித்துள்ளதாவது:- “ பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும் தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தங்களின் பண்பாடு , அடையாளம் வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ஜல்லிக்கட்டு மாறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப்பிரச்சினைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்.
  • தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதும் உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது.  நாட்டு மாடு இனம் அழிவதற்கு துணைப்போகிறவர்கள், ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
  • சட்டமும் ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக்கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

—————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *