ஜெயலலிதா கல்லறை காயும் முன்பே கட்சி பதவியை ஏற்றவர் சசிகலா: பி.எச்.பாண்டியன் குற்றச்சாட்டு…

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
ஜெயலலிதா கல்லறை காயும் முன்பே கட்சி பதவியை ஏற்றவர் சசிகலா: பி.எச்.பாண்டியன் குற்றச்சாட்டு…
The short URL of the present article is: http://parivu.tv/2Tknv
Share
 • சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் சென்னையில் பேட்டியளித்து வருகிறார். கடந்த 2 நாட்கள் நடந்த நிகழ்வு என் மவுனத்தை கலைத்துவிட்டது.
 • ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு மருத்துவமனைக்கு சென்றேன் என பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.
 • மருத்துவமனைக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை.
 • மேலும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க மெய்க்காப்பாளர்கள் அனுமதிக்கவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார். 
 • ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக  ஊடகங்களில் தகவல் வெளியாகியது என்று பி.எச்.பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.
 • ஜெயலலிதா நலமாக இருப்பதாக ஒரே பதில்தான் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
 • ஜெயலலிதா உடல்நிலை குறித்து சசிகலாவுக்கு துளியும் வருத்தமில்லை என்று பி.எச்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
 • சசியும் அவரது குடும்பத்தினரும் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை. மேலும் 73 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு தொடர்ந்து சென்றேன் என பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.
 • ஜெயலலிதாவை பார்க்க கடைசி நிமிடம் வரை போராடினேன். ஆனால் பதப்படுத்துவதற்கு முன் ஜெயலலிதா உடலை பார்க்க அனுமதிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 • ராஜாஜி ஹாலில் சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். 
 • ஜெயலலிதா கல்லறை காயும் முன்பே கட்சி பதவியை ஏற்றார் சசிகலா. 2016 செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் இல்லத்தில் இரவில் நடந்தது என்ன என இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 • வீட்டில் யார் யார் இருந்தார்கள் என விசாரிக்க வேண்டும். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடந்த பி.எச்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
 • கட்சி பதவி பெறமாட்டேன் என கூறியவர் எப்படி பொதுச்செயலாளர் ஆக முடியும். விதியை மீறி பொதுச்செயலாளராக யாரும் ஆகமுடியாது எனவும் பி.எச்.பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
 • முதலமைச்சர், பொதுச்செயலாளராக பதவியேற்க தகுதியற்றவர் சசிகலா. அதிமுக பொதுச்செயலாளர் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது சட்டதிட்ட விதி என்று அவர் கூறியுள்ளார்.

——————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *