தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவிப்பு …

By / 2 years ago / Games, India, NEWS, Tamil Nadu / No Comments
தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவிப்பு …
The short URL of the present article is: http://parivu.tv/r8YOI
Share
  • தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் போது அதனை நேரில் காண வருவேன் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  • தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தன்னெழுச்சி போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
  • இந்நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டயே கட்ஜு ஜல்லிக்கட்டுக்கு ஆரம்ப முதலே ஆதரவு தெரிவித்து வருகிறார். அதாவது மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற முடியும் என்றும், ஜல்லிக்கட்டு என்ற பெயரை நீக்கிவிட்டு ஏறுதழுவுதல் என்ற பெயரில் போட்டியை நடத்தலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.
  • இந்த நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்ட வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த சட்ட வரைவை உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலை பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளது.
  • இந்நிலையில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என்றும், அதை நேரில் காண செல்வேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *