தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்…

By / 2 years ago / Games, NEWS, Tamil Nadu / No Comments
தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்  வலியுறுத்தல்…
The short URL of the present article is: http://parivu.tv/rg5xR
Share
  • தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து விட்டு மதுரையிலிருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
  • அப்போது பேசிய அவர், தமிழகம் நலம் பெற்று விளங்க வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம் என்றார்.
  • அதற்கு நிலையான ஆட்சி அமைவது முக்கியமான ஒன்று என குறிப்பிட்டார். 
  • மேலும் பேசிய அவர் இப்போது மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளிலும் தமிழக அரசு நிர்வாகம் சீர்குலைந்து தான் இருந்தது.
  • மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முன்பை விட படுமோசமாக நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாக தெரிவித்தார்.
  • அதுவும் குறிப்பாக ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசு நிர்வாகம் சொல்ல இயலாத அளவிற்கு பழுதடைந்துள்ளதாகவும், அதிலும் கடந்த ஒரு வாரமாக ஆட்சி நிர்வாகம் கடுமையாக சீரழிந்துள்ளதாகவும் சாடியுள்ளார். 

———————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *