தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகத்திலும் மாடு விடும் திருவிழா கோரி போராட்டம் : முன்மாதிரியாக விளங்கும் தமிழக இளைஞர்கள்…

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகத்திலும் மாடு விடும் திருவிழா கோரி போராட்டம் : முன்மாதிரியாக விளங்கும் தமிழக இளைஞர்கள்…
The short URL of the present article is: http://parivu.tv/vxawr
Share
  • தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகத்திலும் மாடு விடும் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகாவில் ஹம்பாலா என்று அழைக்கப்படும் மாடு விடும் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கோரிக்கை விடுத்திருந்தார்.
  • சேற்று வயலில் சீறிப்பாயும் மாடுகளுடன் வீரர்கள் விளையாடுவதே ஹம்பாலா என்று அழைக்கப்படும் திருவிழா ஆகும்.
  • தமிழகத்தை போலவே கர்நாடகத்திலும் மாடுவிடும் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளன.
  • ஹுப்ளியில் மாடுவிடும் திருவிழா நடத்தியவர்கள் ஹம்பாலா மாடுவிடும் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
  • ஜல்லிக்கட்டு கோரி தமிழகத்தில் மாணவர்கள் திரண்டு நடத்திய எழுச்சி போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
  • இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
  • மாநிலத்தின் மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு, எருதுவிடும் திருவிழா, ரேக்ளா பந்தையம், மாடுபிடி திருவிழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

—————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *