தமிழகம், புதுச்சேரியில் வேகமாக பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: சேலத்தில் 1 வயது குழந்தை பலி

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
தமிழகம், புதுச்சேரியில் வேகமாக பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: சேலத்தில் 1 வயது குழந்தை பலி
The short URL of the present article is: http://parivu.tv/6GOkL
Share
  • தமிழகம், புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • சேலத்தில் அம்மாபேட்டையை சேர்ந்த ஆறுமுகநார் என்பவரது 1 வயது ஆண் குழந்தையை காய்ச்சல் காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
  • காய்ச்சல் குறையாததால் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பன்றிக்காய்ச்சலே உயிரிழப்புக்கு காரணம் என கோவை மாநகராட்சி சான்று அளித்துள்ளது.
  • ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 2 வயது பெண் குழந்தைக்கும் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
  • இதையடுத்து குழந்தைக்கு சேலம் அரசு மருத்துமனையில் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • இதனிடையே புதுச்சேரியி்ல் பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகி இருப்பதாகவும் 21 பேருக்கு நோய் அறிகுறி இருப்பதாகவும் சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
  • பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்களும் அந்த நோய்த்தாக்கத்துக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
  • ஏற்கனவே பன்றிக்காய்ச்சல் காரணமாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *