தமிழக அமைச்சரவை: கவர்னர் பதவிப்பிரமாணம்…

The short URL of the present article is: http://parivu.tv/dwO6J
- தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.
- ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவருக்கு தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 30 பேருக்கு தமிழக அமைச்சர்களாகவும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை தொடர்ந்து, மற்ற அமைச்சர்கள் அனைவரும் அணி அணியாக பதவியேற்று கொண்டனர்.
- தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் மூன்றாவது முறையாக புதிய அமைச்சரவை பதவியேற்பது குறிப்பிடத்தக்கது.
- 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக ஜெயலலிதா, கடந்த மே மாதம் 22-ல் பதவியேற்றார்.
- பின்னர் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து கடந்த டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது.
- தற்போது அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி வரும் 15 நாட்களுக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநா் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
———————————————————————————————————————–
Chief of Cabinetgovernorsworn in
Leave a comment