தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்றுக் கொள்வதில் இன்னும் ஒரு வாரம் காத்திருப்பதில் தவறில்லை:சட்ட நிபுணர்களுடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை…

The short URL of the present article is: http://parivu.tv/oZTP9
- தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார்.
- பதவியேற்றுக் கொள்வதற்கு அவர் இன்னும் ஒரு வாரம் காத்திருப்பதில் தவறில்லை என்றும் வித்யாசாகர் ராவ் கருத்துத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே ஓபிஎஸ்சின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட வித்யா சாகர் ராவ், புதிய முதலமைச்சர் பதவியேற்றுக் கொள்ளும் வரை அவரே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
- இந்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ், நேற்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோருடன் வித்யாசாகர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- சொத்து குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வர உள்ள நிலையில், சசிகலா பதவி ஏற்றுக்கொள்வது குறித்து என்ன சட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
- மேலும் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவிஏற்பதில் சட்ட சிக்கல் உள்ளதா என்பது குறித்து அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி மற்றும் சட்ட நிபுணர்கள் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார் என கூறப்படுகிறது.
- தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று காலை, கோவை பாரதியார் பல்கலையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது.
- ஆனால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கோவை வராமல் டில்லியிலிருந்து நேரடியாக மும்பை சென்றதோடு மட்டுமல்லாமல் , ஊட்டியிலிருந்த அவரது குடும்பத்தினரையும் மும்பைக்கு வரவழைத்தார்.
- இந்நிலையில், கவர்னரின் சென்னை வருகை ரத்தானதால், சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி எப்போது என்பது தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது.
- இதனிடையே சட்ட சிக்கல்கள் எல்லாம் முடிவடைந்த பின் பதவியேற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும் அதற்கு ஒரு வாரம் சசிகலா பொறுத்திருக்கலாம் என்றும் ஆளுநர் கருத்துத் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
————————————————————————————————————————————
onsulting with legal expertsTamil Nadu GovernorVidyasagar Rao
Leave a comment